தபால்துறை சார்பில் ஆதார் கார்டில் பெயர் சேர்க்கும் முகாம்
கூடலூரில் தபால்துறை சார்பில் ஆதார் கார்டில் பெயர் சேர்க்கும் முகாம் நடந்தது.
தேனி
தபால்துறை சார்பில், ஆதார் கார்டில் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்டவை தொடர்பான சிறப்பு முகாம் கூடலூரில் நடந்தது. தேனி கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் மேற்பார்வையில், முகாம் நடந்தது. இதில் ஆதார் கார்டில் தொலைபேசி எண், பெயர், முகவரி, புகைப்படம் சேர்த்தல், நீக்குதல் மற்றும் கைரேகை புதுப்பித்தல், குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் கார்டு எடுத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது. முகாமில் போடி உட்கோட்ட ஆய்வாளர் மருதபாண்டி, கூடலூர் தபால்துறை அதிகாரி சரவணன், அஞ்சல் எழுத்தர் குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த முகாம் தொடர்ந்து சில நாட்களுக்கு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story