தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில் 2,023 வீரர்கள் தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை


தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில் 2,023 வீரர்கள் தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
x

தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில் 2,023 சிலம்ப வீரர்கள் உலக வரைபடம் போல் நின்று சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

காஞ்சிபுரம்

2,023 சிலம்ப வீரர்கள்

குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில், சிலம்ப பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து உலக வரைபடம் போல் நின்று சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2,023 சிலம்ப கலை வீரர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் நின்று சிலம்பம் சுற்றி இந்த சாதனை படைத்தனர். இந்த சாதனையானது யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட் மற்றும் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

பதக்கங்கள்

இந்த சாதனை நிகழ்வில் சிலம்ப பயிற்சியாளர்களுக்கு நினைவு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிறப்பாக சிலம்பம் சுற்றி சாதனை புரிந்த வீரர்- வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

இதில் சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிலம்ப கலை பள்ளிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். 2024-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் சிலம்ப கலைக்கு முக்கிய வாய்ப்பு தர வேண்டும் என சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.


Next Story