நீதிக்கட்சி பிறந்த தினத்தில் சமூக நீதியை மீட்டெடுக்க உறுதி ஏற்போம் - கி.வீரமணி


நீதிக்கட்சி பிறந்த தினத்தில் சமூக நீதியை மீட்டெடுக்க உறுதி ஏற்போம் - கி.வீரமணி
x

நீதிக்கட்சி பிறந்த தினத்தில் சமூக நீதியை மீட்டெடுக்க உறுதி ஏற்போம் என கி.வீரமணி கூறியுள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

69 சதவீத ஒதுக்கீட்டை இன்று அனுபவிக்கிறோம் என்றால், அதற்கான அடிக்கல் நாட்டியது நீதிக்கட்சியே. பெண்களுக்கு வாக்குரிமை, பொது சாலைகளில், நீர் நிலைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் புழங்கும் உரிமை, மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்றிருந்த தடையை நீக்கிய ஆணை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கியது, தேவதாசி முறை ஒழிப்பு, இந்து சமய அற நிலையத்துறை உருவாக்கம் என்று பல சமூக மாற்றத்திற்கான சாதனை சட்டங்களை உருவாக்கியதுதான் நீதிக்கட்சி.

நீதிக்கட்சி பிறந்த தினம் நவம்பர் 20-ந்தேதி. சமூகநீதிக்குப் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில், 1916-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதியில் ஊன்றப்பட்ட விதையின் வீரமும், விவேகமும் கலந்த விளைச்சல் தேவைப்படுகிறது. அதேபோல, வீதிமன்றங்களில் களம் அமைத்துப் போராடி, அதற்காகக் கொடுக்கவேண்டிய விலையைக் கொடுத்து, சமூகநீதியை மீட்டெடுக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story