குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் கனமழையால் விழுந்த பாறைகளை அகற்றும் பணி தீவிரம்


குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில்  கனமழையால் விழுந்த பாறைகளை அகற்றும் பணி தீவிரம்
x

குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் கனமழையால் விழுந்த பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் கனமழையால் விழுந்த பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாறைகள் விழுந்தன

குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலை ஆங்கிலேயர் காலகட்டத்தில் பணியாளர்கள் மூலம் மலைகளை குடைந்து அமைக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வனப்பகுதி உள்ளது. பருவமழை காலத்தில் சாலையில் மரம் விழுதல், பாறைகள் விழுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 தினங்களுக்கு மேலாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது. சமீபத்தில் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றது.

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சாலையோரத்தில் மண் அகற்றப்பட்டுள்ளதால் பாறைகள் அதிகளவில் அந்தரத்தில் தொங்கி கொண்டு உள்ளன.இரவு நேரங்களில் கன மழை பெய்வதால் சாலையோரத்தில் உள்ள பாறைகள் அவ்வப்போது விழுகின்றன. பாறைகள் திடீரென சரிந்து விழுவதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்து உள்ளனர்.குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திர உதவியுடன்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் மீண்டும் மண்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story