கீழ்ப்பாக்கத்தில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு 'சீல்'


கீழ்ப்பாக்கத்தில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு சீல்
x

கீழ்ப்பாக்கத்தில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

சென்னை

சென்னை கீழ்ப்பாக்கம் வாசு தெருவில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் 35 குடியிருப்புகள் உள்ளன. அந்த கட்டிட உரிமையாளர் தரைக்கு கீழே ஒரு தளம், தரை தளம் மற்றும் 3 மாடிகளில் 26 குடியிருப்புகள் கட்டுவதற்காக மட்டுமே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி பெற்று இருந்தார். ஆனால் விதிமுறையை மீறி கட்டிடம் கட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கு கடந்த மாதம் 12-ந்தேதி நோட்டீசு அனுப்பப்பட்டது. அதில், திட்ட அனுமதியின்படி கட்டிடத்தை மாற்றியமைக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மறுபடியும் கடந்த 13-ந்தேதி அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. விதிமுறையை மீறியதால் கட்டிடத்தை பூட்டி 'சீல்' வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கட்டிட உரிமையாளரோ, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அனுப்பிய நோட்டீசை பொருட்படுத்தவில்லை. இந்தநிலையில், வணிக ரீதியில் செயல்பட்டு வந்த அந்த கட்டிடத்தின் தரைக்கு கீழே உள்ள தளம், தரை தளம் பகுதியை நேற்று காலையில் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.


Next Story