ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார்களின் விலை கிடு கிடு உயர்வு


ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார்களின் விலை கிடு கிடு உயர்வு
x

ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார்களின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. பூவன் வாழைத்தார் ரூ.600-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர்

வாழை விவசாயிகள்

நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிட்டு உள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

சிறு விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கும் வாழைத்தார்களை நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

கிடு கிடு உயர்வு

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கும், ரஸ்தாலி ரூ.350-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. ஆடி அமாவாசையையொட்டி வாழைத்தார்களின் விலை நேற்று கிடு கிடுவென உயர்ந்தது. அதன்படி பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி ரூ.400-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.450-க்கும், மொந்தன் ரூ.600-க்கும் விற்பனையானது.

வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதால் வாழை பயிரிட்டு உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Related Tags :
Next Story