ஆருத்ரா தரிசனத்தையொட்டி பல்லக்கில் சாமி வீதி உலா
கடலங்குடி கச்சபரமேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி பல்லக்கில் சாமி வீதி உலா பெண்களே சுமந்து சென்ற வினோதம் .
மயிலாடுதுறை
குத்தாலம்:
குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தில் கச்ச பரமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2012-ம் ஆண்டு அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் திருப்பணிகளை செய்து குடமுழுக்கு நடத்தினர். இந்த கோவிலில் திருவாதிரையையொட்டி நேற்று அதிகாலை சாமி, அம்பாள் மற்றும் சிவகாமி அம்பாள், நடராஜ பெருமானுக்கு பால், சந்தனம், தயிர், திரவியப்பொடி, இளநீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நடராஜ பெருமாள், அம்பாள் உற்சவ மூர்த்திகளை பல்லக்கில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் தோள்களில் சுமந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர். வழக்கமாக கோவில்களில் ஆண்கள் மட்டுமே சாமியை தூக்கி வரும் நிலையில் இந்தகோவிலில் பெண்கள் மட்டுமே சாமியை தோளில் சுமந்து வருவது உலகில் எங்கும் இல்லாத தனி சிறப்பு.
Related Tags :
Next Story