சித்திரை திருவிழாவையொட்டிசிவகாமியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்


சித்திரை திருவிழாவையொட்டிசிவகாமியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:46 PM GMT)

சித்திரை திருவிழாவையொட்டி, சின்னமனூர் சிவகாமியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

தேனி

சின்னமனூரில் சிவகாமியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிவகாமி அம்மன் பச்சை நிற பட்டு உடுத்தி பிரியாவிடையுடன் அழைத்து வரப்பட்டார். பின்னர் கோவில் வளாகத்தில் பொன் ஊஞ்சலில் அமர வைத்து மேள, தாளம் முழங்க பூலாநந்தீஸ்வரர், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது அர்ச்சகர் கணேச பட்டர் மற்றும் மாணிக்கவாசகம் ஆகியோர் மாங்கல்யத்தை சிவகாமியம்மன் கழுத்தில் கட்டி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

இதையடுத்து சுவாமி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. திருமணமான பெண்கள் பிரசாதமாக கொடுக்கப்பட்ட, மஞ்சள் கயிற்றை தங்களது கழுத்தில் கட்டி, மனமுருகி வேண்டினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நதியா செய்திருந்தார். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story