ஆடி மாத பவுர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு


ஆடி மாத பவுர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 29 July 2023 12:09 PM GMT (Updated: 29 July 2023 12:20 PM GMT)

காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாததால் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தனமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் உள்ள இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, வருகிற 1-ந்தேதி ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை (30-ந்தேதி) முதல் 2-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல முதலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கோவில் அருகே பற்றிய காட்டுத்தீ இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படாததால், அனுமதி மறுக்கப்படுவதாக தற்போது வனத்துறை தெரிவித்து உள்ளது.


Next Story