விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை தீவிரம்


விநாயகர் சதுர்த்தியையொட்டி  பூஜை பொருட்கள் விற்பனை தீவிரம்
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி கரூரில் பூஜை பொருட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றன.

கரூர்

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி அன்று பக்தர்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை நடத்தி வழிபாடு செய்து 3 நாட்கள் கழித்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள். விநாயகர் சதுர்த்தியையொட்டி கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் விற்பனை நடந்தது.

விற்பனை தீவிரம்

இதையொட்டி பூஜைக்கான பொருட்கள் வாங்க கரூர் கடைவீதிகளில் பொதுமக்கள் வருகை தந்தனர். பூஜைக்கான தேங்காய், பழம், பொறி, சந்தனம், குங்குமம், பூ மாலைகள், களிமண்ணால் ஆன விநாயகர் சிலை, விநாயகர் சிலைகளின் மீது வைப்பதற்கான அலங்கார குடைகள், வாழைக்குலைகள் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர். இதனால் கடை வீதிகளில் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றன.

300 சிலைகள்

இதேபோல விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வாங்கியவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் அலங்கார பணிகளை மேற்கொண்டனர். விநாயகர் சிலைகளை இன்று முதல் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

20-ந்தேதி ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது உண்டு. மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதனால் கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


Next Story