சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நிமிடம் 2 கைகளிலும் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை


சுதந்திர தினத்தை முன்னிட்டு  75 நிமிடம் 2 கைகளிலும் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை
x

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டிப்பட்டி நகரில் தனியார் அமைப்பு மூலம் சிலம்பாட்ட சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது

தேனி

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டிப்பட்டி நகரில் தனியார் அமைப்பு மூலம் சிலம்பாட்ட சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பள்ளிகளை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒரே மாதிரியான சீருடை அணிந்து 75-வது சுதந்திர தினத்தை போற்று வகையில் 75 நிமிடம் தொடர்ச்சியாக 2 கைகளிலும் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். கலாம் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு சாதனைக்காக நடந்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story