தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழாவையொட்டிதிருச்செந்தூர், காயாமொழியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாைல அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழாவையொட்டிதிருச்செந்தூர், காயாமொழியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாைல அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழாவையொட்டி திருச்செந்தூர், காயாமொழியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாைல அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் 119-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில், அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவில் அறங்காவலர் செந்தில் முருகன், தி.மு.க. ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், வேல் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடார் வியாபாரிகள் சங்கம்

திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராசு நாடார் தலைமையில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்க செயலாளர் செல்வகுமார், பொருளாளர் செல்வின், துணை தலைவர்கள் முருகன், அழகேசன், துணை செயலாளர்கள் பாலமுருகன், சத்தியசீலன், பரமசிவம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கோடீஸ்வரன், முத்துராஜ், உறுப்பினர்கள் முத்து பட்டுராஜா, மதன், முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டிலைட்டா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மண்டல செயலாளர் தமிழினியன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர் முத்து, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சங்கதமிழன், தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை சிவா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் வேலவன், அஞ்சலி, ஜெயபால், சர்மிளா, கன்னிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காயாமொழி

காயாமொழியில் உள்ள 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், ராகவா ஆதித்தன், முருகன் ஆதித்தன், தங்கேச ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், ராதாகிருஷ்ண ஆதித்தன், வெங்கடேஷ் ஆதித்தன், அசோக் ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், குமரேச ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகானந்தா ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், தனிகேச ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன், பிச்சையாண்டி பிள்ளை, அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி

இந்து முன்னணி சார்பில் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பரமன்குறிச்சி சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சி.பா.ஆதித்தனார் அரசு பள்ளி

காயாமொழி சி.பா.ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளி மனோகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் ராஜகுமரன், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் முத்துக்குமார், செயலாளர் செல்வகுமார், பள்ளி மேலாண்மை குழு செயலாளர் சுந்தர், துணைத்தலைவர் சித்திரைவேல், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் இப்ராஹிம் பாலாஜி, வேலவன், பாலமுருகன், அமிர்தலிங்கம், மகேந்திரன், கோபால் பாஸ்கர், இளங்கேஸ்வரன், சுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் மாநில பொதுச்செயலாளர் ரவி கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் கண்ணன், பா.ஜ.க. திருச்செந்தூர் தேர்தல் பணிக்குழு தலைவர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கழகம்

தூத்துக்குடியில் உள்ள சமத்துவ மக்கள் கழக மாவட்ட அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

சமத்துவ மக்கள் கழக மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணை செயலாளர் அருள்ராஜ், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்துசெல்வம், மாநகர செயலாளர் உதயசூரியன், மாநகர அவைத்தலைவர் மதியழகன், மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ் மற்றும் மாரியப்பன், தெய்வகாளை, மந்திரம், முத்து செல்வம், ஸ்டீபன், அருணா, வினோத், சந்திரன், துரைசாமி, அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story