பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலையில் இன்று நடைதிறப்பு..!


பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலையில் இன்று நடைதிறப்பு..!
x
தினத்தந்தி 26 March 2023 9:39 AM IST (Updated: 26 March 2023 9:40 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலை,

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. எனினும், பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை கொடியேற்றம் நடைபெறுகிறது. ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.



1 More update

Next Story