கோவில் திருவிழாவை முன்னிட்டுஇரட்டை மாட்டு வண்டி பந்தயம்
கம்பத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
தேனி
கம்பம் அருகே சுருளிப்பட்டி கிராமத்தில் கோட்டை கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தேன் சிட்டு, தட்டான்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு என 4 பிரிவாக இந்த போட்டிகள் நடந்தது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 150 வண்டி மாடுகளுடன் சாரதிகள் கலந்து கொண்டனர்.
மாடுகளின் வயதை அடிப்படையாக கொண்டு போட்டியின் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. சுருளிப்பட்டி-சுருளி அருவி சாலையில் போட்டி விறு விறுப்பாக நடைபெற்றது. இதை சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராமாளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாடுகள், சாரதிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story