விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்


விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்
x

சதுர்த்தி விழாவின் போது மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்

கடலூர்,

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பாதுகாப்பு பணி மேற்கொள்வது தொடர்பாக சிதம்பரம், சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பட்டாசு வெடிக்க தடை

விநாயகர் சிலை நிறுவ விரும்பும் அமைப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் முறையே, கோட்டாட்சியர், துணை ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சிலைகள் 10 அடிக்கு மேல் வைக்கக்கூடாது. கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்தக்கூடாது. விநாயகர் சிலை நிறுவும் இடங்கள், கரைக்கும் இடங்கள், ஊர்வல பாதைகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். சிலைகள் கரைக்கும் இடம், ஊர்வல பாதைகளை போலீஸ் அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்து வைக்க வேண்டும். அரசு வகுத்துள்ள விதிகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும்.

சட்டம்- ஒழுங்கு

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ்ராஜ், ரூபன்குமார், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், வினோதா, மைக்கேல், ஏழுமலை, பாண்டிச்செல்வி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story