கம்பத்தில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கம்பத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசாார் கைது செய்தனர்.
கம்பத்தில், கம்பம்மெட்டு சாலையில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனை அருகே கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனபேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.
இதில் ஒருவரை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவரிடம் 109 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கம்பம் உலக தேவர் தெருவை சேர்ந்த மகாலிங்கம் (வயது 57) என்பதும், லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர். தப்பி ஓடிய தாத்தப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேனை தேடி வருகின்றனர்.