கம்பத்தில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கம்பத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தேனி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதற்கு தேனி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியடி ஊர்வலமாக சென்றனர்.
கம்பம் அரசு கள்ளர் பள்ளி அருகே தொடங்கிய ஊர்வலம் வடக்கு போலீஸ் நிலையம், ஏ.கே.ஜி. திடல், போக்குவரத்து சிக்னல், காந்தி சிலை, வ.உ.சி. திடல், பத்திர பதிவு அலுவலகம், அரசு மருத்துவமனை வழியாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பு முடிந்தது. இதில் மதுரை கோட்டப்பொறியாளர் வரலட்சுமி, உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி, மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமன், போக்குவரத்து ஆய்வாளர் செந்தாமரை கண்ணன், நெடுஞ்சாலைத்துறை உத்தமபாளையம் உதவி கோட்ட பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் வைரக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.