கம்பத்தில் ஓடையில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்திய தூய்மை பணியாளர்கள்
கம்பத்தில் ஓடையில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.
தேனி
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக கம்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஓடைகள் மற்றும் சாக்கடை கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் 8-வது வார்டு பகுதியில் உள்ள சேனை ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்தது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஓடையில் இறங்கி பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினர். இதனை சுகாதாரத்துறையினர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மழைக்காலங்களில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story