குன்னூரில் உள்ள மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை:சினிமா பாட்டுப்பாடி அசத்திய பேராசிரியை -சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
குன்னூரில் உள்ள மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையையொட்டி கல்லூரி பேராசிரியை சினிமா பாட்டுப்பாடி அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குன்னூர்
குன்னூரில் உள்ள மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையையொட்டி கல்லூரி பேராசிரியை சினிமா பாட்டுப்பாடி அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கேரளாவில் ஓணம் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது கேரள மாநிலமே களைகட்டி வருகிறது. இதேபோல் தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மாவேலி மன்னனை வரவேற்கும் வகையில் கல்லூரிகளில் அத்தப்பூ கோலம் போட்டு மாணவ-மாணவிகள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் கேரளாவின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இதேபோல் வீடுகளிலும் பூக்கோலம் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
சினிமா பாட்டு பாடினார்
இந்தநிலையில் குன்னூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சார்பில் கோலாகலமாக ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில், கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து, மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக பல்வேறு, வண்ண பூக்களால் அத்தப் பூக்கோலம் இட்டனர். நிகழ்ச்சியின் போது கல்லூரியின் பொருளாதார துறை உதவி பேராசிரியை ஷிபி, 'என்னவளே... அடி என்னவளே....' என்ற சினிமா பாடலை பாடி அசத்தினார். இவர் சினிமா பாட்டு பாடும் போது சக மாணவிகள், பேராசிரியைகள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள். கல்லூரி பேராசிரியை சினிமா பாடல் பாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது மக்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்து உள்ளது.