ஓணம் பண்டிகை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து...!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை,
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-
தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஓணம் நன்னாள் வாழ்த்துகள். அழகிய இத்திருநாள் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமைக்கான அறுவடைத் திருநாளாகும். மக்கள் அனைவரையும் வாழ்த்துவதற்கு வருகைதரும் மாமன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் ஒளிவிடும் பல்வேறு வண்ணங்கள் நம் அனைவருக்குமான அன்பையும், சகோதரத்துவதையும், வலிமையுறச் செய்யட்டும். மாமன்னன் மகாபலியின் வாழ்த்துக்கள் இந்த அம்ருதகாலத்தில் நம் இந்தியத் திருநாட்டின் இலக்கை நிறைவு செய்வதாக அமையட்டும்.
இவ்வாறு கவர்னர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story