வடகிழக்கு பருவமழை: ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்‌ - அமைச்சர் செந்தில்பாலாஜி


வடகிழக்கு பருவமழை: ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்‌ -  அமைச்சர் செந்தில்பாலாஜி
x
தினத்தந்தி 1 Nov 2022 2:28 PM IST (Updated: 1 Nov 2022 2:28 PM IST)
t-max-icont-min-icon

ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்‌.சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

கோவை,

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது ;

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வார்டு சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில் 846 இடங்களில் மக்கள் சபை கூட்டம் இன்று நடக்கிறது.

கோவையில் கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் ரூ.211 சாலை பணிகள் தொடங்கப்பட்டு சில இடங்களில் முடிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் சிறப்பு நிதியாக ரூ. 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.26 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு வருகிறது. மீதமுள்ள பழுதடைந்த சாலைகளும் சீரமைக்கப்படும். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது. வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்‌.சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மின்வாரியம் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.


Next Story