"ஒரே நாடு, ஒரே தேர்தல்" நமது கூட்டாட்சி அமைப்பை குழிதோண்டி புதைக்கும் முயற்சி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஒரே நாடு, ஒரே தேர்தல் நமது கூட்டாட்சி அமைப்பை குழிதோண்டி புதைக்கும் முயற்சி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

சென்னை,

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது;

"'ஒரே நாடு - ஒரே தேர்தல்' என்ற மத்திய பாஜக அரசின் அழுத்தம், நமது கூட்டாட்சி அமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் அப்பட்டமான முயற்சியாகும். இது மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவின் சாரத்திற்கு எதிரான மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை நோக்கிய நகர்வாகும். இந்த திடீர் அறிவிப்பும், அதைத் தொடர்ந்து உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டதும் சந்தேகங்களைத் தூண்டுகிறது." இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story