பன்றி காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு...!!


பன்றி காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு...!!
x

வாணியம்பாடி நியூ டவுண் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் அங்குள்ள நியூ டவுன் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்தார்.

தொற்று பரவும் அபாயத்தால் வாணியம்பாடி நியூ டவுண் பகுதியில் உள்ள கடைகளை 5 நாட்களுக்கு மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்பகுதி முழுவதும் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story