வெள்ளக்கோவில் வாரச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனை
வெள்ளக்கோவில் வாரச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனை
வீ.மேட்டுப்பாளையம்
வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் வாங்கி செல்வார்கள். இந்த சந்தையில் நேற்று தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், சின்ன வெங்காயம் ரூ. 50-க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 20-க்கும், கேரட் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனையானனது. கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.60-க்கும், பீட்ரூட் ஒரு கிலோ ஒரு ரூ. 60-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.40-க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ.25-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.80-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ. 240-க்கும் முட்டைக்கோஸ் ரூ. 20-க்கும், சுரைக்காய் ரூ.10-க்கும், பாகற்காய் ஒரு கிலோ ரூ. 80-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ. 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.