தக்காளி கிலோ ரூ.57-க்கு விற்பனை
தக்காளி கிலோ ரூ.57-க்கு விற்பனை
திருப்பூர்
திருப்பூரில் கடந்த மாதம் தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக அடிமட்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் கடந்த 2 வாரங்களாக தக்காளி வரத்து மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இதனால் விலை அதிகாித்து கொண்டே செல்கிறது. அவ்வாறு திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்றுமுன்தினம் மொத்த விலையாக ரூ.43-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோவுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.57-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கடந்த ஒரு வார காலமாக பெரும்பாலான காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இனிவரும் நாட்களில் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும். சில்லரை விற்பனையாக ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.
============