ஒரு லட்சம் டன் குப்பைகள் அகற்றம் சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்


ஒரு லட்சம் டன் குப்பைகள் அகற்றம் சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்
x

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையின் காரணமாக கடந்த 6-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 709 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம், நெட்டுக்குப்பம் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கனமழை மற்றும் மிக்ஜம் புயலின் காரணமாக ஏற்பட்ட எண்ணெய் படலம் அகற்றும் பணி மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்படுத்தும் பணிகளையும், ராயபுரம் மண்டலத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய பணியாளர்கள் மூலம் கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றும் பணிகளையும், திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலத்துக்கு உட்பட்ட கத்திவாக்கம் பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மழைகால சிறப்பு முகாமையும் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

நெட்டுக்குப்பம் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்பணி மூலம் 12 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையின் காரணமாக கடந்த 6-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையில் 93 ஆயிரத்து 475 டன் குப்பை கழிவுகள் மற்றும் 9 ஆயிரத்து 234 டன் தோட்டக்கழிவுகள் என மொத்தம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 709 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story