மேலும் ஒருவர் கைது


மேலும் ஒருவர் கைது
x

பெட்ரோல் பங்க்கில் பணம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் சத்யாமோகன் பெட்ரோல் பங்க்கில் 2 பேர் புகுந்து ரூ.1,09,600 மற்றும் செல்போனை திருடி சென்றனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடியவர்களை தேடி வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த குண்டு கார்த்திக் (வயது23) என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய காரியாபட்டியை சேர்ந்த நல்ல மணி (23) என்பவரை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story