ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் சாவு; பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு


ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் சாவு; பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு
x

ஒரகடம் அருகே கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சிபுரம்

கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்து

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோனில் வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கியாஸ் சிலிண்டர் குடோனில் கடந்த மாதம் 28-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர்கள் வெடிக்க தொடங்கியது. இந்த தீ விபத்தில் மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்தனர். 12 பேரில் சிகிச்சை பலனின்றி ஆமோத்குமார் (வயது25), சந்தியா (21), ஜீவானந்தம் (50), குடவாசல் பகுதியை சேர்ந்த குணால் (22), தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர் (13), சண்முகப்பிரியன் (17), கோகுல் (22), குடவாசல் பகுதியை சேர்ந்த அருண் (23) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் சாவு

இந்த நிலையில் தீ விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (11), நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கியாஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.


Next Story