ஆருத்ரா கோல்டு நிறுவனம் மீதான மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது


ஆருத்ரா கோல்டு நிறுவனம் மீதான மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது
x

ஆருத்ரா கோல்டு நிறுவனம் மீதான மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். ரூ.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை,

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொதுமக்களை ஏமாற்றி ரூ.2,400 கோடி வரை சுருட்டி விட்டதாக புகார் எழுந்தது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

முக்கிய குற்றவாளி கைது

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பாஸ்கர், மோகன்பாபு, பேச்சிமுத்துராஜ், அய்யப்பன் உள்ளிட்ட 5 பேர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். நேற்று 6-வதாக அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 34) என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

தீவிர விசாரணைக்கு பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சொன்ன தகவல் அடிப்படையில் ரூ.1.97 கோடியும், சோதனை நடத்தப்பட்டபோது, ரூ.7.95 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆக ரூ.2 கோடிக்கு மேல் ரொக்கப்பணம் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

1 More update

Next Story