வேனில் 48 கிலோ புகையிலைபொருட்கள் கடத்தியவர் கைது


வேனில் 48 கிலோ புகையிலைபொருட்கள் கடத்தியவர் கைது
x

வேனில் 48 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரத்தில் நேற்று மதியம் கரூர் தாராபுரம் சாலையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வாகன சோதனையில் தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான 5-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.அப்போது வேன் ஒன்று தாராபுரம் நோக்கி மிக வேகமாக வந்தது.அதனை கண்ட போலீசார் தடுத்து நிறுத்தி வேனை சோதனை செய்தனர். அப்போது வேனில் பண்டல், பண்டலாக கட்டுகள் இருந்து தெரியவந்தது.வேன் டிரைவரிடம் கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறிய டிரைவர் மீது சந்தேகம் ஏற்பட்டு வேனை தாராபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது தாராபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விற்பனைக்காக புகையிலை பொருட்களை கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் தாராபுரம் கொழிஞ்சிவாடியை சேர்ந்த அண்ணாசாமி மகன் செல்வபாண்டி (வயது24) என தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிந்து 48-கிலோ புகையிலை பொருட்கள்,வேனை பறிமுதல் செய்த பின்னர் செல்லப்பாண்டியை போலீசார் உடுமலை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.




Next Story