ஆன்லைனில் வழக்குதாக்கல் செய்யும் வசதி தொடக்கம்


ஆன்லைனில் வழக்குதாக்கல் செய்யும் வசதி தொடக்கம்
x

புதுக்கோட்டை கோர்ட்டில் ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

ஆன்லைன் வசதி தொடக்கம்

கோர்ட்டு நடைமுறைகளில் ஆன்லைன் வசதி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காகிதம் இல்லா நடவடிக்கையாக இதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை கோர்ட்டிலும் ஆன்லைன் வசதி தொடங்கப்பட்டது. இதற்காக கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த வசதி மூலம் புதுக்கோட்டை கோர்ட்டில் உரிமையியல், குற்றவியல் தொடர்பான வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டுமானால் ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்ய வேண்டும். இனி கோர்ட்டில் கட்டு கட்டாக ஆவணங்களை கொண்டு தாக்கல் செய்ய முடியாது. அந்த மனுக்களை இந்த மையத்தில் கணினியில் ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கட்டணங்கள் ஆன்லைனிலேயே ெசலுத்தும் வசதி

அதன்பின் வழக்கமான நடைமுறைகளை கணினியிலேயே நீதிபதிகள் பார்த்து கொள்வார்கள். மேலும் ஜாமீன் மனு, முன் ஜாமீன் மனு உள்ளிட்டவற்றையும் ஆன்லைனில் தான் இனி தாக்கல் செய்ய முடியும். ஆன்லைனில் தாக்கல் செய்தவற்கான கட்டணங்கள், ஆன்லைனிலேயே செலுத்தும் வசதி உள்ளது. இந்த வசதி வக்கீல்கள், மனுதாரர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்டத்தில் பிற இடங்களில் உள்ள கோர்ட்டுகளிலும் இந்த வசதி தொடங்கப்பட்டதாக கோர்ட்டு வட்டாரத்தில் தெரிவித்தனர். முன்னதாக புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Next Story