ஆன்லைன் சூதாட்டம்: குறுஞ்செய்தி வழியான விளம்பரங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


ஆன்லைன் சூதாட்டம்: குறுஞ்செய்தி வழியான விளம்பரங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான குறுஞ்செய்தி வழியான விளம்பரங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான குறுஞ்செய்தி வழியான விளம்பரங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை மத்திய தகவல் - ஒலிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. சமூகப் பொறுப்பு மிக்க இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு மக்கள் அடிமையாவதற்கு இந்த விளம்பரங்கள் முக்கியக் காரணங்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதனால் தான் இத்தகைய விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அது சாத்தியமாகியிருப்பதில் மகிழ்ச்சி!

மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை ஊடகங்கள் முழுமையாக கடைபிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அதேபோல், மக்களை சூதாட அழைக்கும் செல்பேசி குறுஞ்செய்தி வழியான விளம்பரங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!" என்று கூறியுள்ளார்.



Next Story