55 கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்ததால் ஒரு சில நிமிடத்தில் தீர்ந்த தக்காளி

ராமநாதபுரம் உழவர் சந்தை்ககு 55 கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்ததால் ஒரு சில நிமிடத்தில் தக்காளி விற்று தீர்ந்தன. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
ராமநாதபுரம் உழவர் சந்தை்ககு 55 கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்ததால் ஒரு சில நிமிடத்தில் தக்காளி விற்று தீர்ந்தன. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
தக்காளிக்கு மவுசு
தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே உள்ளது. பெட்ரோலை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் தக்காளிக்கு மவுசு இன்னும் குறையவில்லை. பொதுமக்கள் தங்களின் உழைப்பிற்கான ஊதியத்தில் பாதி தொகையை தக்காளிக்கு செலவிடும் அவல நிலை காணப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.140 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் உழவர் சந்தையில் தக்காளி மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உழவர் சந்தையில் தக்காளி விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலைத்துறை மூலம் நடவடிக்கை எடுத்தது. ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தையில் நேற்று காலை தோட்டக்கலைத்துறை சார்பில் கடை அமைக்கப்பட்டு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.95 என்ற விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் போட்டிபோட்டி வாங்கி சென்றனர். விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் தக்காளி விற்று தீர்ந்துவிட்டது.
55 கிலோ மட்டுமே
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி நாகராஜன் கூறியதாவது:- அரசின் உத்தரவின்படி மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து 55 கிலோ தக்காளி வரவழைக்கப்பட்டு விற்பனை செய்தோம். நாளை(இன்று) மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி கொண்டு வந்து 80 கிலோ வரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார். இதுகுறித்து தக்காளி வாங்க வந்த பொதுமக்கள் கூறியதாவது:- மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூறியதால் நம்பி வந்தோம். ஆனால் 55 கிலோ தக்காளி என்பது 55 பேர்தான் வாங்கி செல்லும் வகையில் இருந்தது. இதனால் நாங்கள் மலிவு விலையில் தக்காளி வாங்க வந்து ஏமாற்றமடைந்தோம். இன்னும் அதிக அளவில் தக்காளி வாங்கி வந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வியாபாரம் குறைவு
உழவர் சந்தை பெண் காய்கறி வியாபாரி ஒருவர் கூறியதாவது:- இத்தனை ஆண்டு காலம் இங்கேதான் கடைபோட்டு விற்பனை செய்து வருகிறோம். எங்களுக்கு ஒரு பெட்டி ரூ.ஆயிரத்து 700 என்று தக்காளி விற்கின்றனர். அதனை வாங்கி வந்து ரூ.140 என்று விலை வைத்து விற்பனை செய்கிறோம். மலிவு விலையில் விற்பனை செய்ததால் எங்களின் வியாபாரம் குறைந்துவிட்டது. எங்களிடம் தக்காளியை வாங்கி விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றார். ராமநாதபுரம் அம்மா பூங்கா அருகில் புதிதாக தொடங்கப்பட்ட வாரச்சந்தையில் வெளியூர்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்ததால் ஏராளமானோர் அங்கு சென்று தக்காளி வாங்கி சென்றனர்.






