ஊழலற்ற ஆட்சியை பா.ஜனதாவால் மட்டுமே வழங்க முடியும்

ஊழலற்ற ஆட்சியை பா.ஜனதாவால் மட்டுமே வழங்க முடியும் என்று மேட்டுப்பாளையத்தில் அண்ணாமலை பேசினார்.
பெண்கள் மோடியின் பக்கம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று மாலை என் மண்... என் மக்கள்... யாத்திரையை பா.ஜ.க. மாநில தலைவர் அண் ணாமலை மேற்கொண்டார். இதையொட்டி மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
மேட்டுப்பாளையத்தில் கடந்த 28-ந் தேதி இஸ்லாமிய சகோதரர்களின் ஊர்வலம் இருந்ததால் பாதயாத்திரை தள்ளிவைக்கப்பட்டது. அதன் பிறகு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. தொண்டன் கூட தலைவர் ஆவது பா.ஜ.க.வில் மட்டும் தான். மோடியின் கரத்தை வலுப்படுத்த பெண்கள் மோடியின் பக்கம் நிற்கிறார்கள். எந்த கட்சியிலும் இல்லாதவாறு பா.ஜ.க.வில் பெண்கள் தான் தலைவராக உள்ளார்கள். ஆனால் பலரும் பெண் சுதந்திரம் பற்றி பேசுவார்கள். ஆனால் அதை நாம் செய்து காட்டி உள்ளோம்.
நீலகிரி தொகுதி
1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் பயங்கரவாத தாக்குத லில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். பிற இடங்களில் வியர்வை சிந்தி கட்சியை வளர்ப்பார்கள். மேட்டுப்பா ளையத்தில் ரத்தத்தை சிந்தி கட்சியை வளர்த்து உள்ளார்கள்.
மோடி மீண்டும் பிரதமராக வரும் வேளையில் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியில் அமரும். ஊழல் இல்லாத ஆட்சியை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளில் வெல்ல வேண்டும். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியை ஆ.ராசாவின் பிடியில் இருந்து மீட்டு பா.ஜ.க.வின் கையில் கொடுக்க வேண்டும்.
கமிஷனுக்காக நிற்கவில்லை
இங்கு கூடிய கூட்டம் சாதாரண கூட்டம் இல்லை. ரூ.1,000 உழைத்தால் ரூ.500 கட்சிக்காக செலவு செய்கின்றனர். யாரிடமும் கமிஷனுக்காக கைக்கட்டி நிற்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் 7 மாதம் அதாவது 210 நாட்கள் தான் இருக்கிறது. இதே எழுச்சி 210 நாட்களும் இருக்க வேண்டும். நீலகிரி தொகுதியில் ஆ.ராசா எம்.பி.யை அப்புறப்படுத்த வேண்டும்.
மேட்டுப்பாளையம் பட்டு சேலைக்கு பெயர் பெற்றது. தமிழகத்தில் 2,540 ஹெக்டர் பரப்பளவில் கறிவேப்பிலை விவசாயம் செய்யப்படுகிறது. இதில் காரமடையில் தமிழகத்தின் பாதி கறிவேப்பிலை உற்பத்தி செய்யப்படுகிறது. காரமடையின் செங்காம்பு கறிவேப்பிலைக்கு மத்திய மந்திரி பியூஸ் கோயல் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கம்
கோவைக்கு ரூ.580 கோடியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கோவை விமான நிலை விரிவாக்கம் ரூ.2400 கோடியில் நடைபெற்று வருகிறது. பிரதமர் திட்டத்தில் 53 ஆயிரத்து 688 பேருக்கு இலவச வீடு வழங்கப்பட்டு உள்ளது. குடிநீர் 66 சதவீதம் பேருக்கு குழாய் மூலம் வருகிறது. 66 ஆயிரத்து 839 விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் முத்ரா திட்டத்தில் ரூ.9,602 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது இத்திட்டங்களை கூறி ஓட்டு கேட்போம். ஆனால் தி.மு.க. என்ன சொல்லி ஓட்டு கேட்பாங்க. ரூ.30 ஆயிரம் கோடி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பாதித்து உள்ளார். 35 அமைச்சர்களில் 11 அமைச்சர் மீது வழக்கு உள்ளது.
வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்வு, வாழை ஆராய்ச்சி மையம், நெசவாளர்களுக்கு உதவி தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்துதல் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. பிரதமர் மோடி வழங்கும் அரிசியும், முட்டையும் நமக்கு முழுவதுமாக வரவில்லை. மேட்டுப்பாளையத்தில் கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு சத்துணவு முட்டை தனியார் குடோனில் உள்ளது.
முதல் தலைமுறை கருணாநிதி, இரண்டாம் தலைமுறை மு.க. ஸ்டாலின், மூன்றாம் தலைமுறை உதயநிதி, நான்காம் தலைமுறை இன்பநிதி. இதுதான் தி.மு.க. தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடக்கிறது. இதை எல்லாம் அப்புறப்படுத்தி நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க.வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம், துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, செயற்குழு உறுப்பினர் சதீஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






