இந்தியா கூட்டணியில் கடைசியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே மிஞ்சுவார்- டிடிவி தினகரன்


இந்தியா கூட்டணியில் கடைசியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே மிஞ்சுவார்- டிடிவி தினகரன்
x

கோப்புப்படம்

தேர்தலில் தனித்து போட்டியிட நேர்ந்தால் கூட ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சேலம்,

கவர்னரும், மத்திய மந்திரிகளும்தான் தமிழ்நாட்டிற்கு பெரும் தலைவலியாக இருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறியதாவது, "நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பதற்காக பல கட்சிகளிடம் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலை விட ஒரு படி மேலே சென்று நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியை முறித்து கொண்டு வெளியேறியுள்ளார். இந்தியா கூட்டணியில் கடைசியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே மிஞ்சுவார்.

அயோத்தி ராமர் கோவில் விழா மூலம் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு ஆதரவு கிடைத்துள்ளது என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும்.

கவர்னரும், மத்திய மந்திரிகளும்தான் தமிழ்நாட்டிற்கு பெரும் தலைவலியாக இருக்கிறார்கள். கவர்னர் பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே அப்பதவிக்கு அழகு" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story