ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

அரக்கோணத்தில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிபேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முழுவதுமாக தடுக்கும் வகையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனையை தடுக்க நகராட்சி ஆணையர் லதா தலைமையில் நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதம், சுகாதார அலுவலர் மோகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் காந்தி ரோடு, மணியக்கார தெரு மற்றும் பஜார் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் இருந்து ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.


Next Story