ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது


ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது
x

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 3-ந் தேதி பெய்த கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி ரெயில் நிலையம் வரை பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 3-ந் தேதி பெய்த கனமழை காரணமாக கல்லார் முதல் அடர்லி ரெயில் நிலையம் வரை பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் தண்டவாள பாதையில் மரங்களும் சாய்ந்தன. மழை பாதிப்பால் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையும், மீண்டும் 9 முதல் 16-ந் தேதி வரையும் ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த மாதத்தில் மழை பாதிப்பு தொடர்ந்ததால் 22-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 8 நாட்கள் ஊட்டி -குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது.

தற்போது ஊட்டி- குன்னூர் இடையே ரெயில்வே பாதை சரி செய்யப்பட்டு விட்டதால் நேற்று முதல் நீலகிரி மலைரெயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் குன்னூர் மற்றும் ஊட்டி ரெயில் நிலையங்களில் செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். வருகிற 8-ந் தேதி ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story