ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்து


ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்து
x
தினத்தந்தி 8 Jun 2023 11:48 AM GMT (Updated: 8 Jun 2023 11:54 AM GMT)

ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

உதகை,

ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மலை ரெயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் இறங்கிய பெட்டியினை சரி செய்யும் பணி நடைபெறுவதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story