பெரம்பலூரில் 2 புதிய ரேஷன் கடைகள் திறப்பு


பெரம்பலூரில் 2 புதிய ரேஷன் கடைகள் திறப்பு
x

பெரம்பலூரில் 2 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.

பெரம்பலூர்

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட விளாமுத்தூர் சாலையில் உள்ள இளங்கோநகர் மற்றும் வடக்குமாதவி சாலையில் உள்ள கிரசண்ட் நகர் ஆகிய பகுதிகளில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் இயங்கும் வகையில், 1,728 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையிலும் புதிதாக முழு நேரமும் இயங்கும் வகையில் 2 ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டன. இந்த கடைகளின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். புதிய ரேஷன் கடைகளை பிரபாகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூருக்கு ரூ.108 கோடி மதிப்பில் காவிரி குடிநீர் வழங்கும் பிரத்யேக திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளிலும் சாலை மேம்பாடு செய்வதற்கு ரூ.1 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, சாலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நகராட்சி விரிவாக்க பகுதிகளில் சாலை மேம்பாடு செய்வதற்கு ரூ.2 கோடி கூடுதலாக நிதி கேட்கப்பட்டுள்ளது, என்றார். விழாவில் நகர்மன்ற தலைவர் அம்பிகாராஜேந்திரன், துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், வார்டு கவுன்சிலர் சஹர்பானு, கூட்டுறவு துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) அரப்பலி, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story