அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உண்டியல்கள் திறப்பு


அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உண்டியல்கள் திறப்பு
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியத்தில் பிரசித்தி பெற்ற முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் அவ்வப்போது உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் இருக்கும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 162 ரூபாய் வசூலானது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது செயல் அலுவலர் அருள், கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சத்தியவாணி மற்றும் எழுத்தர் லோகநாதன், கோவில் பணியாளர்கள் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story