நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
வடசெட்டியந்தல் கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள வடசெட்டியந்தல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிமணிவண்ணன் தலைமை தாங்கினார். பேரூராட்சிமன்ற தலைவர் ரோஜாரமணிதாகப்பிள்ளை, தொழில் அதிபர் கதிரவன், ஒன்றிய கவுன்சிலர் குமாரி பன்னீர்செல்வம், நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சங்கராபுரம் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் தி.மு.க. நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கலைச்செல்வன், விவசாய சங்க பொருளாளர் மோகன்தாஸ், நிர்வாகிகள் செல்வம், ரமேஷ், ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story