சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு


சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
x
தினத்தந்தி 19 Oct 2023 7:00 PM IST (Updated: 19 Oct 2023 7:00 PM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது.

தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலஷ்மி துரைபாபு குடிநீர் சத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் கே.பி.ராஜன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர் சுதாகர் வரவேற்றார். மற்றும் வார்டு உறுப்பினார்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.


Next Story