உயர்மட்ட நடைபாதை மேம்பாலம் திறப்பு
குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உயர்மட்ட நடைபாதை மேம்பாலத்தை மாணவ-மாணவிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
குனியமுத்தூர்
கோவை குனியமுத்தூர் -பாலக்காடு மெயின்ரோடு ரைஸ்மில் சாலை சந்திப்பில் சாலையை கடக்க வசதியாக இரும்பால் ஆன உயர் மட்ட நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த மேம்பாலம் நீண்டநாட்களாக பயன்பாடு இன்றி கிடந்தது. இந்த நிலையில் குனியமுத்தூர் அரசு பள்ளி எதிரே உள்ள பாலக் காடு சாலையை கடக்க மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர்.
எனவே ரைஸ்மில் சாலை சந்திப்பில் இருந்த உயர்மட்ட நடை பாதை மேம்பாலத்தை குனியமுத்தூர் அரசு பள்ளி அருகே மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ரைஸ்மில் சாலை சந்திப்பில் இருந்த உயர்மட்ட நடைபாதை மேம்பாலம் பெயர்த்து எடுக்கப்பட்டு சேதம டைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து குனிய முத்தூர் அரசு பள்ளி அருகே மாணவர்கள் சாலையை கடக்க வசதியாக ரூ.40.60 லட்சத்தில் உயர்மட்ட நடைபாதை மேம் பாலம் அமைக்கப்பட்டது. அது நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நடைபாதை மேம்பாலத்தை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் குனியமுத்தூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் அவர்கள் அந்த நடைபாதை மேம்பாலத்தில் சென்று சாலையை கடந்து மகிழ்ந்தனர்.