ரூ.20 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
பாவூர்சத்திரம் அருகே முத்துகிருஷ்ணபேரியில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
தென்காசி
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம்மேலகிருஷ்ணபேரி ஊராட்சிக்குட்பட்ட முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story