சம்பா கொள்முதல் பருவத்தை முன்னிட்டு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு; திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு


சம்பா கொள்முதல் பருவத்தை முன்னிட்டு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு; திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

சம்பா கொள்முதல் பருவத்தை முன்னிட்டு நெல் கொள்முதல் நிலைய பணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் கிராமத்தில் சம்பா கொள்முதல் பருவத்தை முன்னிட்டு விவசாயிகளுக்காக திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு மற்றும் விவசாயிகளிடம் இருந்து கொண்டுவரப்பட்ட நெல்கலை தூற்றும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகளும், ஈரப்பதம் அளவிடும் கருவி மூலம் ஆய்வு செய்யும் பணிகளும், அரசு விதிகளுக்கு உட்பட்டு நெல்கள் பெறப்படும் பணிகளும் நேற்று நடைபெற்றது.

இந்தப் பணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து கலெக்டர் நெல் நடவு பணி மேற்கொள்ளும் விவசாய தொழிலாளர்களோடு கலந்துரையாடினார். பின்னர் கலெக்டர் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களோடு இணைந்து வயலில் இறங்கி நெல் நாற்றுகள் நடவு செய்யும் பணியில் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சேகர், மண்டல துணை மேலாளர் முனுசாமி, வேளாண் வணிக துணை இயக்குனர் ராஜேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுபப்பிரியா சக்திதாசன், சரவணன், சக்திதாசன் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.


Next Story