கோடை விடுமுறைக்கு பின் தொடக்கப்பள்ளிகள் திறப்பு


கோடை விடுமுறைக்கு பின் தொடக்கப்பள்ளிகள் திறப்பு
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடைவிடுமுறைக்கு பின்னர் தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடைவிடுமுறைக்கு பின்னர் தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளிகள் திறப்பு.

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் 1611 தொடக்கப்பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் கடந்த சில நாட்களாக தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் பணியாளர்களால் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கரும்பலகைகள், மேஜைகள் தூய்மை செய்யப்பட்டது.

பள்ளி வகுப்புகள் தொடக்க நாளான நேற்று காலை மழலை செல்வங்கள் புதிய பள்ளி சீருடை அணிந்து மிகவும் ஆர்வமாக பள்ளிகளுக்கு வருகை தந்தனர். குழந்தைகளை தாயார் பள்ளிக்கு கொண்டு வந்து விட்டபோது புதிய இடத்தை பார்த்து பள்ளிகளுக்குள் வராமல் அடம்பிடித்து அழுததை பார்க்க முடிந்தது. அந்த குழந்தைகைள ஆசிரியைகள் தாயாருக்கு இணையாக அரவணைப்பு செய்து வகுப்புகளுக்கு அழைத்து வந்தனர்.

பாடப்புத்தகங்கள்

அரசு பள்ளிகளில் காலை இறைவணக்கம் முடிந்தவுடன் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களை ஆசிரியர்கள் வழங்கினர். பள்ளி தொடக்க நாளை முன்னிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தொடக்கப்பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.



Next Story