1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகள் உற்சாகம்
கரூர் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் பொதுத்தேர்வுகள், ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த பின் கடந்த மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதேபோல எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டன. கோடை விடுமுறை முடிந்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வாழ்த்தி பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
அடம்பிடித்த குழந்தைகள்
முதன் முதலாக பள்ளிக்கு வந்த குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து பள்ளியில் விடும் போது சில குழந்தைகள் அழுது அடம்பிடித்தனர். பள்ளியில் பெற்றோரையும் பிடித்துக் கொண்டு சில குழந்தைகள் அழுதது. மேலும் பள்ளியில் விட்டு சென்ற பின்னரும் சில குழந்தைகள் அழுதபடி இருந்தனர். இந்த குழந்தைகளை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தினர். மேலும் இந்த குழந்தைகளை ஆசிரியர்கள் வகுப்பறையில் அமர வைத்து உற்சாகப்படுத்தினர்.
பூ-இனிப்புகள் கொடுத்து வரவேற்பு
அதேநேரத்தில் சில குழந்தைகள் அடம்பிடிக்காமல் உற்சாகமாய் முதன் முதலாக பள்ளிக்கு வந்து வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருந்தனர். மேலும் சாக்லெட் உள்பட இனிப்புகளை சில மாணவ- மாணவிகள், வகுப்பில் சக மாணவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளை வாழ்த்தி வரவேற்றனர். சில பள்ளிகளில் மாணவர்களை பூ கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் ஆசிரியர்கள் வரவேற்றனர். தொடர்ந்து பள்ளிகளில் இறைவணக்கம் நடைபெற்றது. பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி படித்தனர்.
நொய்யல்
நொய்யல், நடையனூர், புகழூர், செம்படபாளையம் சர்க்கரை ஆலை, காகித ஆலை, புன்னம், வேட்டமங்கலம், குறுக்குச்சாலை, குளத்துப்பாளையம், குந்தாணி பாளையம், சேமங்கி, மரவாபாளையம், முத்தனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, கூலக்கவுண்டனூர், தவுட்டுப்பாளையம், புன்னம் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டது.
பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பூங்குத்து கொடுத்தும், சாக்லெட் கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. குளத்துப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமையிலான ஆசிரியைகள், பள்ளி கல்வி குழுவினர் பூக்கள், சாக்லெட் கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டும் வரும் பள்ளிகளில் நேற்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்று பூங்கொத்தும் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.
இதன் ஒரு பகுதியாக மூலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை திலகம், உதவி ஆசிரியை பூர்ணிமா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்வி மேலாண்மை குழுவினர் இனிப்புகள் கொடுத்து உற்சாமாக வரவேற்றனர்.