1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு


1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு
x

கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன.

வேலூர்

வேலூர்

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. சுமார் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி ததும்ப வரவேற்றனர். வேலூர் தோட்டப்பாளையம், கொசப்பேட்டை ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மாதிரி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜாப்பூ, இனிப்பு கொடுத்தும், பன்னீர் தெளித்தும், ஆரத்தி எடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.

முதல்நாள் என்பதால் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வந்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் நண்பர்களை கண்ட மகிழ்ச்சியில் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். மேலும் கோடை விடுமுறையில் சென்று வந்த பல்வேறு இடங்கள் பற்றியும், சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்தும் பேசி மகிழ்ந்தனர். மழலையர் பள்ளிகளுக்கு பல குழந்தைகள் செல்ல மறுத்து அடம் பிடித்து அழுதது. அவர்களை பெற்றோர் சமாதானம் செய்து அனுப்பினர். வேலூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என்று 797 பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் ஒன்றாம் வகுப்பில் 1,200 மாணவர்களும், 6-ம் வகுப்பில் 450-க்கும் மேற்பட்ட மாணவர்களும் புதிதாக சேர்ந்தனர் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story