காகிதப்பட்டறையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு


காகிதப்பட்டறையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு
x

வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி காகிதப்பட்டறையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மயானக்கொள்ளை திருவிழா ஊர்வலத்தின்போது சட்டம், ஒழுங்கு பிரச்சினை நடைபெறாமல் இருக்கவும், ஊர்வலத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபடுவதை தவிர்க்கவும் வேலூர் நகரில் 11, காட்பாடியில் 5, குடியாத்தத்தில் 5 என்று மொத்தம் 21 டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வேலூர் புதிய, பழைய பஸ்நிலையங்கள், காகிதப்பட்டறை உள்ளிட்ட மாநகராட்சிக்கு உட்பட்ட 16 கடைகள் நேற்று வழக்கமாக திறக்கப்படும் மதியம் 12 மணிக்கு திறக்கப்படவில்லை. இந்த நிலையில் மாலை 6 மணியளவில் திடீரென காகிதப்பட்டறையில் வேலூர்-ஆற்காடு சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி திறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. மயானக்கொள்ளை ஊர்வலத்துக்கு சென்று திரும்பிய பக்தர்கள், பொதுமக்கள் இதனை கண்டு அதிருப்தி அடைந்தனர். மக்களை ஏமாற்றுவதற்காக விடுமுறை என்று அறிவித்துவிட்டு மாலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்று ஆதங்கத்துடன் சென்றனர்.


Next Story