வைகை அணை திறப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
தேனியில் பெய்யும் தொடர் கன மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி,
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், வைகை அணை அதன் முழு கொள்ளளவை (70 அடி) எட்டியதால் அணையிலிருந்து வினாடிக்கு 4006 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரமாக உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story